ஏப்ரல் 18, புதுடெல்லி (New Delhi): இந்திய பங்குச் சந்தையின் (Indian stock market) அளவுகோல்களான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஆகியவை தொடர்ந்து 4 நாள்களாக சரிந்துகொண்டு இருக்கிறது. சென்செக்ஸ் 455 புள்ளிகள் சரிந்து 72,488.99 ஆகவும், நிஃப்டி 50, 152 புள்ளிகள் குறைந்து 21,995.85 ஆகவும் நிறைவடைந்தது. இந்தியப் பங்குச் சந்தை ஒருபக்கம் சரிந்து வரும் சூழலில், ஐ.டி பங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இன்ஃபோசிஸ், எல்.டி.ஐ.மைண்ட்ட்ரீ (LTIMindtree), இண்டஸ்இந்த் வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் விப்ரோ (Wipro) ஆகியவை முக்கிய பின்னடைவைச் சந்தித்தன. Indian Students Arrested In US For Shoplifting: அமெரிக்காவில் கடையில் திருடிய இரண்டு இந்திய மாணவிகள்.. காவல்துறையினரால் கைது..!

பார்தி ஏர்டெல் (4.03 சதவீதம் வரை), பவர் கிரிட் (2.57 சதவீதம் வரை) மற்றும் பஜாஜ் ஆட்டோ (1.61 சதவீதம் வரை) பங்குகள் நிஃப்டி குறியீட்டில் அதிக லாபம் ஈட்டியுள்ளன. அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ் (3.71 சதவீதம் சரிவு), நெஸ்லே (2.95 சதவீதம் சரிவு) மற்றும் டைட்டன் (2.94 சதவீதம் சரிவு) பங்குகள் நிஃப்டி குறியீட்டில் அதிக நஷ்டம் அடைந்தன. இஸ்ரேல் மீதான ஈரான் ராணுவத்தின் தாக்குதல் எதிரொலியால் ஆசிய சந்தையில் பெரும்பாலானவை சரிவை சந்தித்த நிலையில், இந்திய சந்தையும் சரிந்துள்ளது. இதனால், கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் உள்ளது.