Lok Sabha (Photo Credit: @ANI X)

ஜூன் 12, புதுடெல்லி (New Delhi): 18வது இந்தியா தேர்தல்கள் 2024 நிறைவுபெற்று, மீண்டும் பாஜக (NDA Allianc) தலைமைமையிலான கூட்டணி ஆட்சி இந்திய அரசின் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டு, முறைப்படி தனது பதவியை ஏற்றார். அமைச்சர்களுக்கான துறைகளும் பிரித்து வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பதவியேற்பை தொடர்ந்து எப்போது வேண்டுமானாலும் நாடாளுமன்ற (18th Lok Sabha Parliament Session) கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. Union Ministers List Out Now: மூன்றாவது முறையாக பிரதமரான நரேந்திர மோடி; அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள் யார்?.. லிஸ்ட் இதோ.! 

முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் :

இந்நிலையில், பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஜூலை 24ம் தேதி பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்த தொடரில் மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்பு, சபாநாயகர் தேர்வு, குடியரசு தலைவர் உரை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அதனைத்தொடர்ந்து, மாநிலங்களவை கூட்டத்தொடர் ஜூன் 27ம் தேதி தொடங்கி ஜூலை 03ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த அறிவிப்பை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்டு இருக்கிறார்.