ஜூன் 22, புனே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டம், பிம்பிரி சாவத் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் இளம்பெண் ஒருவர் காரில் கடத்திச் சென்றது தொடர்பான சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உதவி செய்ய முன்வராத போதிலும், காவல்துறையினர்களுக்கு உடனடியாக தகவலை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் தங்களது விசாரணையை முன்னெடுத்தனர்.
விசாரணையில் அதிர்ச்சி திருப்பம்:
இந்த விசாரணையில், பெண்ணை கடத்திச் சென்ற நபர்கள் கைது செய்யப்பட்டு, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெண்ணை தங்களுடன் வற்புறுத்தி அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது. இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, பிடிக்காத கணவரிடம் இருந்து பெண் தப்பிச்செல்ல முயன்றும் உறுதியானது. Students Drowned into Sea: கடலில் உற்சாக குளியல்; திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி இருவர் பலி., 2 பேர் மாயம்.!
சொந்த மனைவியை குடும்பத்துடன் சேர்ந்து கடத்தியது ஏன்?
தாய் தந்தையை இழந்து வசித்து வந்த பெண்மணி, தனது மாமாவின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னதாக திருமண நடைபெற்ற முடிந்த நிலையில், கணவருடன் 8 நாட்கள் மட்டுமே அவர் வாழ்ந்துள்ளார். பின் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில், அவர் தனது மாமாவுடன் சில காலம் வசித்து வந்துள்ளார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் மணமகன் வீட்டார் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட காரணத்தால், அவர் மாமாவிடம் இருந்து பிரிந்து சென்று மும்பை, டெல்லி போன்ற பல இடங்களில் கிடைத்த வேலைகளை செய்து வாழ்க்கையை நகர்த்தி இருக்கிறார்.
காவல்துறையினர் வழக்குப்பதிவு:
இந்நிலையில், தற்போது தானே மகாக்காடு பகுதியில் அவர் வசித்து வருவது தெரிய வந்தநிலையில், அங்கு வந்த கணவரின் குடும்பத்தினர் பெண்ணை தங்களுடன் அழைத்துச் செல்லம் முற்பட்டுள்ளனர். அதற்கு பெண்மணி கடும் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், அவரை வலுக்கட்டாயமாக இழுத்து காரில் கடத்திச் சென்றுள்ளனர். காவல் துறையினர் பெண்ணின் புகாரின்பேரில், அவரது கணவர் மற்றும் அவரது உறவினர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து இருக்கின்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#Pune: Shocking Kidnapping Incident Unfolds in Wakad, Video Goes Viral
Read In Detail
Video 👇 👇 pic.twitter.com/fV5uJsRglR
— Punekar News (@punekarnews) June 21, 2024