Gulzar Sheikh (Photo Credit: @trainwalebhaiya X)

ஆகஸ்ட் 02, லால்கோபால்கஞ்ச் (Uttar Pradesh News): உத்திரப் பிரதேச மாநிலம் லால்கோபால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த குல்சார் ஷேக் என்பவர், யூடியூப் சேனல் வைத்து நடத்தி வருகின்றார். அவருடைய சேனலில் ரயில் தண்டவாளத்தில் கற்கள், சைக்கிள், சிலிண்டர்கள், கோழி போன்றவற்றினை வைத்து ரயில் சென்றவுடன் அவை என்ன ஆகும் என்பதை போன்ற வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வந்துள்ளார். இது ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் உயிருக்கு ஆபத்தாகும் என்ற நோக்கில் அவரின் கைது செய்ய வேண்டும் என்று இணையதளத்தில் அனைவரும் கூறி வந்தனர். அதனைத் தொடர்ந்து குல்சார் அகமது என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், ரயில்வே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் அவர் மீது ரயில்வே சட்டத்தின் 147, 145 மற்றும் 153 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Pune Horror: கதவு மூடும் போது ஏற்பட்ட கோளாறு.. பரிதாபமாக உயிரிழந்த பிஞ்சு உயிர்.. வைரலாகும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!

பொதுவாக ரயில் தண்டவாளம் மேல் சிறிய கல், சைக்கிள் போன்றவைகள் வைத்தால் ரயிலின் வேகம் மற்றும் எடை காரணமாக தண்டவாளம், ரயிலுக்கு சேதம் ஏற்படலாம். இது ரயில் விபத்துக்கு வழிவகுத்து உயிரிழப்பு மற்றும் பொருள் சேதத்தை ஏற்படுத்தும். கனமான பொருள் தண்டவாளத்தில் விழுந்தால், தண்டவாளம் வளைந்துவிடலாம் அல்லது உடைந்துவிடலாம். தண்டவாளம் சேதமடைந்தால் ரயில் தடம் புரள வாய்ப்புள்ளது.இல்லையெனில் தண்டவாளத்தில் பொருள் இருப்பதால் ரயிலின் வேகம் குறையலாம் அல்லது ரயில் திடீரென நிற்க நேரிடலாம். ரயில் தடம் புரள்வது அல்லது திடீரென நிற்கும் போது பயணிகள் காயமடையலாம் அல்லது உயிரிழக்க நேரிடலாம்.

ரயில் தண்டவாளம் என்பது பொது சொத்து. இதை பாதுகாப்பது நம் அனைவரின் கடமை. ரயில் தண்டவாளத்தில் எந்த பொருளையும் வைப்பது என்பது மிகவும் ஆபத்தானது. இது உயிரிழப்பு மற்றும் பொருள் சேதத்தை ஏற்படுத்தும்.