மே 06, கோழிக்கோடு (Kerala News): கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIT) விடுதியில் தங்கி படித்து வந்த மாணவர் ஒருவர் இன்று அதிகாலை தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர், விடுதி மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை (Suicide) செய்துள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த கண்ணமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Young Girl Rape: இளம்பெண் பாலியல் பலாத்காரம்; 4 சிறுவர்கள் வீடியோ எடுத்து மிரட்டல்..!
இதுகுறித்த விசாரணையில், உயிரிழந்த மாணவர் யோகேஷ்வர் நாத் அங்கு மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜீனீயரிங் பயின்று வந்துள்ளார். மேலும், இவர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேற்கொண்டு விசாரணை நடத்தியதில், மாணவர் தற்கொலை செய்திருப்பது தெரியவந்ததை அடுத்து, அதற்கான காரணங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என காவல்துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர். விரிவான விசாரணைக்கு பிறகே, மாணவர் உயிரிழந்த சம்பவம் பற்றிய முழு விவரம் தெரிய வரும் என்று கூறியுள்ளனர்.
கல்லூரி விடுதி கட்டிடத்தில் இருந்து குதித்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், சக மாணவர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.