Violence Against Girl CCTV Snap (PC: Twitter)

டிசம்பர் 27,நொய்டா: 24 மணிநேரமும் இளம்பெண்ணை அயராது (Man Forced Young Girl 24X7 Work) வேலை செய்ய வற்புறுத்திய வீட்டு உரிமையாளர், லிப்டில் இருந்து பெண்ணை கட்டாயப்படுத்தி இழுத்து செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் உள்ள நொய்டா, செக்டர் 120 கிளியோ கவுண்டி (Sector 120, Noida) பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஷெபாலி காவுள். இவரின் வீட்டில் 20 வயதுடைய அனிதா என்ற இளம்பெண் பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார்.

மிகவும் வறுமையான குடும்ப பின்னணியை கொண்ட அனிதாவை 24 மணிநேரமும் வேலையில் இருக்க வேண்டும் என கூறி மனிதாபிமானமின்றி பணியமர்த்தியதாக தெரியவருகிறது. அனிதாவும் வேறு வழியின்றி பிழைப்புக்காக ஷெபாலியின் கருத்துக்களை ஒப்புக்கொண்டுள்ளார். WhatsApp Announcement: டிச. 31 முதல் வாட்சப் 49 ஸ்மார்ட்போன்களில் இயங்காது – புத்தாண்டு பரிசாக ஷாக் செய்தி கொடுத்த அறிவிப்பு..! 

இந்த நிலையில், வேலைக்கு சேர்ந்த நாட்களில் இருந்து நீண்ட நேர பணியை கொடுத்து தொந்தரவு செய்து வந்த ஷெபாலி, சம்பவத்தன்று வீட்டிற்கு செல்ல முயற்சிக்கும் அனிதாவை லிப்டில் இருந்து இழுத்து பணிக்கு அழைத்து செல்கிறார்.

இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகவே, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் வேலை என்ற பெயரில் அனிதாவை ஷெபாலி அடித்து துன்புறுத்தி வந்ததும் அம்பலமானது என்பது குறிப்பிடத்தக்கது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 27, 2022 07:20 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).