Template: World Cup Trophy

டிசம்பர், 10: உலகளவில் ஒருநாள் கிரிக்கெட் தொடர், 20 ஓவர்கள் கொண்ட டி20 (World Cup, T20, IPL) கிரிக்கெட் தொடர் விளையாடப்பட்டு வருகிறது. கடந்த 1975ம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கிய ஒருநாள் கிரிக்கெட் தொடர் 60 ஓவர்களை கொண்டது. பின்னர், இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் சேர்ந்து உலகக்கோப்பை தொடரை 1987ல் வழிநடத்திய போது அவை 50 ஓவர்களாக மாற்றம் செய்யப்பட்டு இன்று வரை கடைபிடிக்கப்படுகிறது.

உலகக்கோப்பையை பொறுத்த வரையில் ஆஸ்திரேலிய (Australia) நாடு அடுத்தடுத்த 3 போட்டிகளில் தொடர் வெற்றி என ஹாட்ரிக் அடித்த சாதனை நடக்கும். தற்போது வரை ஆஸ்திரேலியா 5 உலகக்கோப்பையை தட்டிச்சென்றுள்ளது. இந்தியா & மேற்கிந்திய தீவுகள் அணி (India & West Indies) தலா 2 வெற்றிக்கோப்பையையும் பெற்றுள்ளன. நாடுகள் வாரியான விபரங்கள் பின்வருமாறு., Women Health: ஆண்களை விட பெண்கள் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்; எதனால் தெரியுமா?.. பெண்களே தெரிஞ்சுக்கோங்க.! 

Team India Victory World Cup 2011

ஆஸ்திரேலியா (Australia Cricket Team) அணி 5 முறை (1987, 1999, 2003, 2007, 2015) உலக கோப்பையை வெற்றி பெற்றுள்ளது, இரண்டு முறை ரன்னராக வந்துள்ளது. இங்கிலாந்து (England) அணி ஒருமுறை (2019) உலக கோப்பையை வெற்றி பெற்றுள்ளது, மூன்று முறை ரன்னராக வந்துள்ளது. இந்தியா இரண்டு முறை (1983, 2011) உலக கோப்பையை வெற்றி பெற்றுள்ளது, ஒருமுறை ரன்னராக வந்துள்ளது.

நியூசிலாந்து (New Zealand) அணி இரண்டு முறை ரன்னராக மட்டுமே வந்துள்ளது. பாகிஸ்தான அணி ஒருமுறை (1992) உலக கோப்பையை அடைந்துள்ளது, ஒருமுறை ரன்னராகவும் வந்துள்ளது. ஸ்ரீலங்கா அணி (Sri Lanka) ஒரு முறை (1996) உலக கோப்பையை வெற்றி பெற்றுள்ளது, இரண்டு முறை ரன்னராக வந்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு முறை (1975, 1979) உலக கோப்பையை பெற்றுள்ளது. ஒருமுறை ரன்னராக வந்துள்ளது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 10, 2022 05:56 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).