மே 10, கொச்சி (Kerala News): கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. இதில், கோழிக்கோடு மாவட்டத்தில் 4 பேர், மலப்புரம் மாவட்டத்தில் 6 பேர் என மொத்தம் 10 பேர் இந்த காய்ச்சலில் கடுமையாக பாதிக்கப்பட்டு, கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும், காய்ச்சல் குணமாகததை அடுத்து அவர்கள் 10 பேரின் மாதிரி சேகரிக்கப்பட்டு, கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி நுண்ணுயிர் பிரிவு ஆய்வு மையத்திற்கு, இது எந்த வகை காய்ச்சல் என்பதனை கண்டறிய அனுப்பி வைத்துள்ளனர். Young Girl Raped By Astrologer: இளம்பெண் பாலியல் பலாத்காரம்; ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டிய ஜோதிடர் கைது..!

ஆய்வின் முடிவில், அந்த 10 பேருக்கும் 'நைல் காய்ச்சல்' (Nile Fever) பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. மேலும், இதனை உறுதி செய்ய புனேயில் உள்ள வைரலாஜி ஆய்வகதிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், 'இந்த நைல் காய்ச்சல் பாதித்தவர்களுக்கு கடுமையான தலைவலி, காய்ச்சல், வலிப்பு மற்றும் கை கால் தளர்ச்சி போன்ற அறிகுறிகள் தென்படும். இதனால், சிலருக்கு மூளைச்சாவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும், இதற்கு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது' எனக் கூறியுள்ளனர். இருப்பினும், 79 வயது முதியவர் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை: இதனையடுத்து, கேரள அரசு மற்றும் சுகாதாரத்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் கொசு மருந்து அடித்து தீவிர தடுப்பு பணிகளை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக மாநில சுகாதரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறுகையில், "கேரளாவில் மிரட்டிக்கொண்டிருக்கும் வெஸ்ட் நைல் காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகின்ற சூழலில், அதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இது 100 பேரில் 80 பேருக்கு அறிகுறி தெரியாது. மேலும், இது கியூலெக்ஸ் வகை கொசுக்களால் வேகமாக பரவுகிறது. பொதுமக்கள் அனைவரும் கொசுக்கடியில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்வது அவசியமாகும்" என்று அவர் கூறியுள்ளார்.