மே 10, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம், மிராரோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேலை தேடி வந்துள்ளார். அப்போது, ஜோதிடர் (Astrologer) வினோத் பண்டித் (வயது 55) என்பவர் எதிர்காலத்தை கணித்து கூறுவதாக உள்ள வீடியோவை, ஆன்லைன் விளம்பரத்தில் பார்த்துள்ளார். இதனை பார்த்த அந்த இளம்பெண் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இது நாளைடைவில் ஜோதிடர் வினோத் பண்டித் அந்த இளம்பெண்ணை நம்ப வைத்து, அவரை பாலியல் பலாத்காரம் (Rape) செய்துள்ளார். Bus Driver Death: ஓட்டுநர் தலை நசுங்கி சாவு; அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த சூழலில் நேர்ந்த சோகம்..!

இதனையடுத்து, அந்த இளம்பெண் குடும்பத்தில் ஒரு வருடம் கழித்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மறுபடியும், ஜோதிடரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின்னர், அவர் இளம்பெண்ணை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதனை அவரது போனில் புகைப்படம் எடுத்து மிரட்டி, பணம் பறிக்க முயன்றுள்ளார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான அவர், இதுகுறித்து, நயாநகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இளம்பெண் அளித்த புகாரின்பேரில், ஜோதிடர் வினோத் பண்டித் என்பவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர், தானே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை நீதிமன்ற காவலில் வைத்து சிறையில் அடைத்தனர்.