Jaguar Fighter Jet Crash (Photo Credit: @mjavinod X)

ஏப்ரல் 03, ஆமதாபாத் (Gujarat News): குஜராத் மாநிலம், ஜாம்நகர் (Jamnagar) விமானநிலையத்திலிருந்து வான்வழியாக வந்த ஐஏஎப் ஜாகுவார் போர் விமானம் (Jaguar Fighter Jet) நேற்றிரவு (ஏப்ரல் 02) விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய போது, விமானத்தில் இரண்டு விமானிகள் இருந்தனர். ஒருவர் காயத்துடன் உயிர் தப்பினார். அவர் ஜாம்நகரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதில், மற்றொரு விமானி காணவில்லை. அவரை விமானப்படை அதிகாரிகள் தீவிரமாக தேடிவந்தனர்.  Viral Video: ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணியின் வளர்ப்பு நாய்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ உள்ளே..!

போர் விமானம் விபத்து:

இந்நிலையில், இன்று காணாமல் போன விமானி உயிரிழந்ததாக, விமானப் படை அதிகாரிகள் அறிவித்தனர். விமான படையின் மூத்த அதிகாரிகள், விபத்து நடந்த இடத்திற்கு நேற்று இரவே சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து மீட்பு படை அதிகாரி ஒருவர் கூறுகையில், விபத்துக்கு முன்பு ஒரு விமானி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், மற்றொரு விமானியை மீட்க முடியவில்லை. விமானம் தீப்பிடித்து எரிந்தது. இதனால் தீயில் சிக்கி விமானி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக போர் விமானம் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.