செப்டம்பர் 13, கொழும்பு (Cricket News): ஆசிய கோப்பை தொடரில், கடந்த 11ஆம் தேதி, இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே சூப்பர் ஃபோர் (Super 4) சுற்றின் நான்காவது போட்டி நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்களை எடுத்தது. போட்டியில் விராட் கோலியும் (Virat Kohli) (122), கே எல் ராகுலும் (K L Rahul) (111) அபாரமாக விளையாடி சதங்களை அடித்தனர்.
இந்த கடினமான இலக்கை துரத்த களம் இறங்கிய பாகிஸ்தானின் தொடக்க பேட்ஸ்மேன்கள், சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். கேப்டன் பாபர் அசாம் (Babar Azam) உட்பட 10 ரன்களையே எடுத்திருந்தார். ஐந்தாவதாக பேட்டிங் செய்த ஆகா சல்மான் (Agha Salman) நிதானத்துடன் விளையாடினார். Mexican Congress Alien: 1000 ஆண்டுகள் பழமையான ஏலியனின் சடலம் கண்டெடுப்பு; மக்களுக்கு உண்மையினை அம்பலப்படுத்திய விஞ்ஞானிகள் குழு.!
ஜடேஜாவின் (Ravindra Jadeja) பந்துகளை எதிர்கொண்ட சல்மான் ஒரு கட்டத்தில் ஸ்வீப் அடிக்க முயற்சித்தார். அப்போது அவர் ஹெல்மெட் அணியாத காரணத்தால், வலது கண்ணின் கீழ் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது. அதற்குபின் அவர் முதலுதவி சிகிச்சை பெற்று போட்டியில் விளையாடிய போதும், குறுகிய நேரத்திலேயே 23 ரன்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
போட்டி முடிந்தவுடன் ஆகா சல்மான் கொழும்புவில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றிருக்கிறார். வலி எதுவும் இல்லாத போதும் முகம் வீங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் நாளை நடைபெறவிருக்கும் இலங்கைக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.