Rahul Gandhi (Photo Credit: @PTI X)

மே 27, பீகார் (Bihar News): 2024 மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India), அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தையும் செய்துள்ளது. உலகளவில் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலாக கவனிக்கப்படும் இந்தியா தேர்தல்கள் 2024 (2024 General Elections), ஏப்ரல் 19ல் தொடங்கி ஜூன் மாதம் 01ம் தேதி வரை ஏழு கட்டங்களாக பிரித்து நடத்தப்படுகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை அனைத்தும் ஒரேகட்டமாக ஜூன் 04 அன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். TN Weather Report: மீனவர்களுக்கான எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

இந்நிலையில் பீகார் மாநிலம் பாலிகஞ்ச்சில் இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் பரப்புரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி (Congress leader Rahul Gandhi) உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, ராகுல்காந்தி மேடையில் ஏறி தொண்டர்களிடம் கையை அசைத்தபோது திடீரென மேடை உடைந்து விழுந்ததால் அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.