மே 03, ராய்காட் (Mumbai News): மகாராஷ்டிரா மாநில (Maharashtra Politics) அரசியலில் முக்கிய கட்சியான சிவசேனா, தற்போது இரண்டாக பிரிந்து உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியும், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜகவுடன் ஒரு அணியுமாக இருக்கிறது. இதில் ஏக்நாத் ஷிண்டே பாஜகவுடன் கூட்டணி அமைத்து, சிவசேனா கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சியின் அதிகாரத்தை தனத்துடமையாக்கி அவர் ஆட்சியை பிடித்தார். தற்போது அங்கு சிவசேனா + பாஜக + என்.சி.பி அஜித் பவார் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.

விறுவிறுப்பை பெற்றுள்ள தேர்தல் (2024 General Elections India): 2024 மக்களவை தேர்தலில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா + பாஜக + அஜித் பவார் ஆகியோர் இணைந்து தேர்தலை அம்மாநிலத்தில் எதிர்கொள்கின்றனர். காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் பாலசாகெப் தாக்கரே சிவசேனா அணிகள் ஒருங்கிணைந்து கூட்டணியாக களம்காண்கின்றன. இதனால் அம்மாநிலத்தில் தேர்தல் விறுவிறுப்பு வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்கள் இடையே அதிகரித்து இருக்கிறது. Youngster Suicide: 3 மாத சம்பளத்தை கொடுக்காததால் விரக்தி; 24 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.. கடிதத்தில் அதிர்ச்சி தகவல்.! 

விபத்தில் சிக்கிய பெண் அரசியல் பிரபலம்: இந்நிலையில், உத்தவ் தாக்கரேவின் பாலசாகெப் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த பெண் நிர்வாகியாக இருப்பவர் சுஷிமா அந்தரே (Sushma Andhare). இவர் இன்று ராய்காட் மாவட்டத்தில் கட்சி சார்ந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார். அவரை வரவேற்க கட்சியினர் தங்களின் வாகனத்தில் காத்திருந்தனர். அச்சமயம் ஹெலிகாப்டர் தரையிறங்க முற்பட்டபோது, அதிக மணல் எழுந்து திடீரென விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. சுஷிமா மற்றும் ஹெலிகாப்டர் ஓட்டுநர் ஆகியோர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்தடுத்த ஹெலிகாப்டர் சம்பவங்கள்: கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அமித் ஷா பயணித்த ஹெலிகாப்டர் மேலெழும்பும்போது கோளாறை சந்தித்து பின் விமானியின் கட்டுக்குள் வந்தது. அதேபோல, மேற்குவங்கம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பயணம் செய்த ஹெலிகாப்டரில் அவர் நிலைதடுமாறி விழுந்து பின் பாதுகாவலரால் மீட்கப்பட்டார். இதனிடையே தற்போது ஹெலிகாப்டர் விபத்து நடந்து, அதில் நல்வாய்ப்பாக பெண் அரசியல் பிரமுகர் உயிர்சேதம் இன்றி தப்பி இருக்கிறார்.