அக்டோபர் 15, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிராவில் (Maharashtra) பாஜக கூட்டணியும், ஜார்கண்டில் (Jharkhand) காங்கிரஸ் கூட்டணியும் ஆட்சியில் இருக்கிறது. மகாராஷ்டிரா மாநில அரசின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிகிறது. ஜார்க்கண்ட் மாநில அரசின் பதவி காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் இந்த இரு மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் நவம்பர் 20ஆம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று (அக்.15) அறிவித்துள்ளது. நவம்பர் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அது தெரிவித்துள்ளது. வேட்புமனுத் தாக்கல் வரும் 22ஆம் தேதி தொடங்குகிறது. கடைசி நாள் வரும் 29ஆம் தேதியாகும். மனுவைத் திரும்பப் பெற நவம்பர் 1ஆம் தேதி கடைசி நாளாகும். Wife Kills Husband: குடும்ப தகராறில் கணவன் கத்தியால் குத்திக்கொலை.. மனைவி கைது..!
ஜார்கண்ட் மாநிலத்திற்கு நவம்பர் 13 மற்றும் 20 என இருகட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 13-ஆம் தேதி 43 தொகுதிகளிலும் இரண்டாம்கட்டமாக 38 தொகுதிகளில் நவம்பர் 20ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இம்மாநிலத்திலும் நவம்பர் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.