PM Modi Pays Tribute To Karunanidhi (Photo Credit: @narendramodi X)

ஜூன் 03, புதுடெல்லி (New Delhi): தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்கவே முடியாத தலைவர்களில் ஒருவரான கருணாநிதி (Karunanidhi) அவர்களின் 101வது பிறந்த நாள் இன்று ஆகும். திமுக தலைவராக சுமார் அரை நூற்றாண்டுகளாக இருந்த இவர் சுமார் 18 ஆண்டுகள் தமிழக முதலமைச்சராக இருந்தார். இவரது ஆட்சியின் கீழ் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் புதிய சட்டப்பேரவை கட்டிடம் கட்டப்பட்டது. மேலும் அருந்ததியின மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு, பழங்குடியினருக்கு ஒரு சதவீத தனி இட ஒதுக்கீடு, அரசு பணிகளில் பிற்பட்டோருக்கு முன்னுரிமை போன்ற பல திட்டங்களை கொண்டு வந்தவர். மாற்றுத்திறனாளி மற்றும் திருநங்கை உள்ளிட்ட வார்த்தைகளை பயன்பாட்டில் கொண்டு வந்தது இவரின் சிந்தனையின் விளைவு தான். Nandini Dairy To Sponsor For Scotland: ஐசிசி ஆண்கள் T20 உலகக் கோப்பை.. அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சராகும் டெய்ரி நந்தினி..!

இந்நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை ஒட்டி, அவர்களின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்து பிரதமர் மோடி (PM Modi) ட்வீட் செய்துள்ளார். அதில், "கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். தனது நீண்ட ஆண்டுகள் பொது வாழ்வில் தமிழகம் மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டார். அவர் தனது அறிவார்ந்த இயல்புக்காக பரவலாக மதிக்கப்படுகிறார். நாங்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சராக இருந்தபோதும், அவருடன் நான் நடத்திய பல உரையாடல்களை நான் இன்று அன்புடன் நினைவுகூர்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.