Prajwal Revanna (Photo Credit: @ANI X)

மே 27, கர்நாடகா (Karnataka): கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த பிரஜ்வல் ரேவண்ணா (Prajwal Revanna). இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனாவார். இம்முறையும் பிரஜ்வல் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் பிரஜ்வல் 500-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அவரது பாலியல் லீலைகள் அடங்கிய 2976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அம்மாநில காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், அவரை கட்சியில் இருந்து நீக்கி மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி உத்தரவிட்டுள்ளது. ஆனால் அரசின் உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் ராஜாங்க பாஸ்போர்ட்டை பயன்படுத்தி அவர் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அவரின் பாஸ்போா்ட்டை ரத்துசெய்ய கா்நாடக அரசு வெளியுறவு அமைச்சகத்துக்கு பரிந்துரைத்தது. Brave Safakadal Duo Saves Minor In Daring River: ஓடும் நதியில் அடித்து செல்லப்பட்ட சிறுவன்.. கடவுள் போல் வந்து காப்பாற்றிய இரண்டு இளைஞர்கள்..!

இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஏப்ரல் 26ஆம் தேதி தேர்தல் நடந்தபோது, ​​என் மீது எந்த வழக்கும் இல்லை, எஸ்ஐடியும் அமைக்கப்படவில்லை, எனது வெளிநாட்டுப் பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. எனது பயணத்தில் இருந்த போது குற்றச்சாட்டுகள் பற்றி தெரிந்து கொண்டேன். ராகுல் காந்தி மற்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் இது குறித்தும் எனக்கு எதிராகவும் பேச ஆரம்பித்து, எனக்கு எதிராக அரசியல் சதி உருவானது. மே 31ம் தேதி காலை 10 மணியளவில் சிறப்பு புலனாய்வுக் குழு முன் ஆஜராவண. விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பேன். சட்டத்தை நான் நம்புகிறேன். சட்டத்தின் முன் நான் நிரபராதி என நிரூபிப்பேன். நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.