Rahul Gandhi | Kishori Lal Sharma (Photo Credit: @LatestLY / @HTtimes X)

மே 03, புதுடெல்லி (New Delhi): 2024 மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, தற்போது வரை இரண்டு கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்திய தேர்தல்கள் 2024 (India Elections 2024) ஐ உலகமே உற்றுநோக்கி கவனித்து வருவதால், முன்னெப்போதும் இல்லாத அளவு தற்போது மக்களவை (Lok Shaba Elections 2024 Phase 3) தேர்தல் விறுவிறுப்பு கட்டத்தை எட்டியுள்ளது. ஏப்ரல் 19ல் முதற்கட்ட வாக்குபதிவும், ஏப்ரல் 26ல் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 01 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன. இதன் முடிவுகள் அனைத்தும் ஜூன் மாதம் 04ம் தேதி ஒரேகட்டமாக வெளியாகிறது.

பாஜக - காங்கிரஸ் அரசுக்கான நேரடி மோதல்: இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் கட்சியான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், கடந்த 10 ஆண்டுகளாக (2 மக்களவை தேர்தலில்) ஆட்சியை இழந்த காங்கிரஸ் தலைமையிலான ஒருங்கிணைந்த இந்திய வளர்ச்சி கூட்டமைப்பு கட்சிகள் சார்பில் நேரடி போட்டியில் ஈடுபட்டுள்ளன. அடுத்தடுத்து விறுவிறுப்பு கட்டத்தை எட்டியுள்ள தேர்தலில், தற்போது அடுத்த பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. Aranmanai 4: அரண்மனை 4 படம் எப்படி?.. மக்களின் கருத்தை நேரில் கண்ட உற்சாகத்தில் சுந்தர் சி & குஷ்பூ..! 

ராகுல் காந்தி ரேபரேலியில் களமிறங்குகிறார்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்து வரும் ராகுல்காந்தி (Rahul Gandhi) மக்களவை தேர்தலில் ரேபரேலி தொகுதியில் மீண்டும் களம்காண்கிறார். அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஸ்ரீ கிருஷ்ணோரி லால் சர்மா (Kishori Lal Sharma) களமிறங்குகிறார். இந்த அறிவிப்பை அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் (KC Venugopal) உறுதி செய்துள்ளது. காங்கிரஸ் குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான அமேதி, 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வசம் சென்றது. அங்கு பாஜக சார்பில் ஸ்மிருதி ராணி மக்களால் தேர்வு செய்யப்பட்டார். தற்போது அத்தொகுதியில் ஸ்ரீ கிருஷ்ணோரி களமிறங்குகிறார்.

இவர்கள் களமிறங்கவுள்ள தொகுதியில் மே 20ல் நடைபெறும் ஐந்தாம்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறும். தற்போது அவர்கள் விரைவில் வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளனர். ஏனெனில் இன்றே அத்தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். உத்திரபிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் காங்கிரஸ், ரேபரேலி மற்றும் அமேதி தொகுதி வேட்பாளர்களை தற்போது வரை அறிவிக்காமல் காத்திருந்த நிலையில், தற்போது அது சார்ந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.