ஜூலை 22, பெங்களூரு (Karnataka News): நாட்டில் தகவல் தொழில்நுட்ப மையமாக (IT Firms) பெங்களூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்களுக்கான வேலை நேரத்தினை ஒரு நாளைக்கு 14 மணி நேரமாக உயர்த்த (14-Hour Workday), கர்நாடக அரசுக்கு தகவல் தொழில் நுட்பத் துறை நிறுவனங்கள் பரிந்துரை செய்துள்ளது. இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வரும் பட்சத்தில் ஐடி ஊழியர்கள் ஒரு வாரத்திற்கு 70 மணி நேரம் பணி செய்ய வேண்டும். இது தொடர்பாக கர்நாடகத் தொழில் துறை அமைச்சகம் சார்வில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு: இந்நிலையில் இதுகுறித்து கர்நாடக மாநில ஐடி ஊழியர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "தற்போதுள்ள சட்டம் கூடுதல் நேரம் உட்பட ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 10 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கிறது. இதில் 14 மணி நேர வேலையை கொண்டு வருவது, கடந்த 10 ஆண்டுகளில் தொழிலாளர் வர்க்கத்தின் மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இருக்கக்கூடும். இது தற்போதுள்ள மூன்று ஷிப்ட் முறைக்கு பதிலாக இரண்டு ஷிப்ட் முறைக்கு நிறுவனங்களை கொண்டு செல்லும். இதனால் மூன்றில் ஒரு பங்கு பணியாளர்கள் வேலையை இழக்க நேரிடும். வேலை நேரத்தினை உயர்த்துவதால் தொழிலாளர்கள் உடல்ரீதியாக பாதிக்கப்படுவர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Indian Railways New Rule: ரயிலில் பயணம் செய்யப் போறீங்களா? அப்போ இந்த புதிய விதிமுறைகளை தெரிஞ்சிக்கோங்க..!
கர்நாடகா கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம், 1961-ஐ திருத்துவது குறித்து அம்மாநில அரசு ஆலோசித்து வருகிறது. .தற்போது, தொழிலாளர் சட்டங்கள் 12 மணி நேரம் (10 மணி நேரம் + 2 மணி நேரம் கூடுதல் நேரம்) என்ற வகையில் வேலை நேரத்தை அனுமதிக்கின்றன. இந்த நிலையில் தான், இந்த திருத்தத்தில் ஐடி நிறுவன ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரமாக (12 மணி நேரம் + 2 மணி நேரம் கூடுதல் நேரம்) என திருத்தம் செய்ய வேண்டும் என்ற முன்மொழிவை ஐடி நிறுவனங்கள் கொடுத்துள்ளன.