ஏப்ரல் 03, மும்பை (Maharashtra News): இந்திய ரிசர்வ் வங்கியின் துணை நிலை ஆளுநராக பூனம் குப்தா (Poonam Gupta New RBI Deputy Governor) நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் புதிய ஆளுநர் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது துணைநிலை ஆளுநர் நியமிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி மாதம், துணைநிலை ஆளுநராக இருந்த எம்டி பத்ராவின் பதவிக்காலம் நிறைவடைந்தது. Jaguar Fighter Jet Crash: பயிற்சியின் போது போர் விமானம் விபத்து; விமானி பலியான சோகம்..!
4வது துணைநிலை ஆளுநர்:
இதனைத்தொடர்ந்து, தற்போது புதிய துணைநிலை ஆளுநர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் (NCAER) தலைமை இயக்குனராக பணிபுரிந்து வந்த பூனம் குப்தா துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், வங்கியின் 4வது துணைநிலை ஆளுநர் ஆவார். இவருடைய பதவிக்காலம் 3 ஆண்டுகள். மேலும், பொருளாதார நிபுணரான பூனம் குப்தா பிரதமரின் பொருளாதார நிபுணர் ஆலோசனை குழுவிலும் உறுப்பினராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.