Delhi CM Rekha Gupta (Photo Credit: @TimesAlgebraIND X | @ANI X)

பிப்ரவரி 20, டெல்லி (Delhi News): டெல்லியில் புதிய முதலமைச்சருக்கான பதவியேற்பு விழா இன்று (பிப்ரவரி 20) காலை ராம்லீலா மைதானத்தில் (Ramlila Maidan) தொடங்கியது. கடந்த பிப்ரவரி 05ஆம் தேதி நடந்த சட்டமன்றத் தேர்தலில், ரேகா குப்தா (Rekha Gupta) ஷாலிமார் பாக் தொகுதியில் (Shalimar Bagh), ஆம் ஆத்மி கட்சியின் பந்தனா குமாரியை 29,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றார். இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 19) மாலை நடைபெற்ற பாஜக சட்டமன்றக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு, ஷாலிமார் பாக் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரேகா குப்தா டெல்லியின் அடுத்த முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். Gyanesh Kumar: புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பதவியேற்பு..!

4வது பெண் முதலமைச்சர்:

அப்போது பேசிய அவர், "டெல்லியை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதில் உறுதிபூண்டுள்ளேன்" எனக் கூறினார். அதே நேரத்தில் "டெல்லியின் ஒவ்வொரு குடிமகனின் நலன், அதிகாரமளித்தல் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக நேர்மை மற்றும் அர்ப்பணிப்புடன்" பணியாற்றுவதாக உறுதியளித்தார். 50 வயதான இவர், சுஷ்மா ஸ்வராஜ் (பாஜக), ஷீலா தீட்சித் (காங்கிரஸ்) மற்றும் அதிஷி (ஆம் ஆத்மி) ஆகியோருக்குப் பிறகு டெல்லியின் நான்காவது பெண் முதலமைச்சர் ஆவார்.

ரேகா குப்தா பதவியேற்பு:

இந்நிலையில், இன்று மதியம் 12.35 மணிக்கு துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா, புதிய முதல்வர் ரேகா குப்தா மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, லெப்டினன்ட் கவர்னர் வி.கே. சக்சேனா உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். மேலும், பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த பல மத்திய அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா, புதிய முதல்வர் ரேகா குப்தா மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்: