டிசம்பர், 11: நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு (Food is Medicine) நமக்கு மருந்தாக இருந்த காலம் என்பது மலையேறி, சுற்றுசூழல் காரணமாக வேதிப்பொருட்களும் (Chemicals) உணவுகள் வழியே உடலை வந்தடைகிறது. இந்த கழிவுகள் உடலின் கழிவுநீக்க அமைப்பினால் வெளியேற்றப்படுகிறது என்றாலும், அதனால் இயலாத பொருட்களை அப்படியே வைக்கிறது. அது உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது.
கழிவு நீக்க அமைப்பு முழு வளர்ச்சி பெற வயதாகவேண்டும் என்பதால், குழந்தைகளுக்கு அவை பிற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. குழந்தைகளுடைய கழிவுநீக்க மண்டலம் நச்சு கழிவுகளை வெளியேற்ற இயலாமல் திணறும். இதனால் வேதிப்பொருட்கள் வயதானோரை விட குழந்தைகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இவ்வாறாக குழந்தைகளுக்கு சிறு வயதில் ஏற்படும் வேதிப்பொருள் பாதிப்பு அப்போதே தெரிவதும் இல்லை. அவர்களுடைய எதிர்காலம் நீண்டது என்பதால், அவர்கள் வளர்ந்து வரும் பருவங்களில் பிரச்சனை தெரிகிறது. இதனால் புற்றுநோய், மூளை பாதிப்பு, இனப்பெருக்க குறைபாடுகள் போன்றவையும் ஏற்படுகின்றன. Actress SriDevi: தமிழ்நாட்டில் பிறந்து பாலிவுட்டை கலக்கிய பிரபல நடிகை.. யார் இந்த ஸ்ரீதேவி?.! சரித்திர சகாப்தம்..!
கர்ப்பிணி பெண்களும் வேதிப்பொருட்களின் தாக்கத்தினால் பாதிக்கப்படுவதால், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கும் அவை பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தாயின் கருவில் குழந்தைக்கு ஏற்படும் வேதிப்பொருள் தாக்கம் கடுமையானவை என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இவை நீண்டகால பின்விளைவு பிரச்சனைகளை ஏற்படுத்தும். குழந்தைகள் கருவில் இருக்கும்போது அவர்களின் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றாக வளர்ச்சி பெரும் என்பதால், வேதிப்பொருள் மாசுக்களால் தாய் மற்றும் குழந்தை பாதிக்கப்படும் பட்சத்தில், எதிர்காலத்தில் குழந்தைகளின் உடலில் பிரச்னையை ஏற்படுத்தும் என்றும் ஆய்வியலார்கள் தெரிவிக்கின்றனர்.