டிசம்பர், 12: ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலில் (United Nations Security Council) நிரந்தர உறுப்பினராக முயற்சித்து வரும் இந்தியாவுக்கு ரஷியா மீண்டும் ஆதரவு அளித்துள்ளது.
ரஷியாவின் (Russia) வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இதுகுறித்து பேசுகையில், "இந்தியா பொருளாதார வளர்ச்சியில் முன்னணி நாடுகளில் ஒன்றாக முன்னிலையில் இருக்கலாம். அந்நாட்டின் மக்கள் தொகை விரைவில் பெரியளவில் இருக்கும். டெல்லி பல பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் ராஜாங்க அனுபவத்தினை கொண்டிருக்கிறது. Napkin Dangerous Chemicals: நாப்கினில் ஆபத்தான ரசாயனங்கள்.. பெண்களே உஷாராக இருங்கள்.. பதறவைக்கும் தகவல்.!
தெற்காசிய ஐக்கிய நாடுகளில் இந்தியா தவிர்க்க முடியாத பங்கை கொண்டு இருக்கிறது. இந்தியா பன்முனை உலகை விரும்புகிறது. இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளும் நிரந்தர உறுப்பினராக வேண்டும்" என்று தெரிவித்தார். இந்தியா ஐ.நா கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக பிரேசிலில், ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளும் ஒத்துழைத்து வருகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் இரண்டாண்டு பதவிக்காலம் டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. 15 நாடுகள் கொண்டுள்ள ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பில் இந்தியா உள்ள நிலையில், இரண்டாவது முறையாக அது தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.