Russian YouTubers Arrest Tardeo Tower Stunt

டிசம்பர் 27, மும்பை: எந்தவித முன் அனுமதியும் இன்றி, மக்களை அச்சுறுத்தும் வகையில் சாகசம் (YouTubers Stunt Video) செய்து வீடியோ எடுத்த யூடியூபர்களுக்கு சட்டம் தனது கடமையை செய்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, டார்டியோ (Tardeo Tower) அடுக்குமாடி குடியிருப்பு 60 மாடிகள் கொண்ட இரட்டை கட்டிடங்கள் ஆகும். இங்கு தொழிலதிபர்கள், முக்கியஸ்தர்கள் போன்றோர் தங்கி இருப்பதால், பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ள கட்டிடமாக இருக்கிறது.

இந்த நிலையில், நேற்று மாலை நேரத்தில் 56-வது மாடியில் டிரோன் பறப்பது போன்றும், 2 இளைஞர்கள் சாகசத்துடன் கூடிய வீடியோ எடுப்பது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. Petrol Bomb Blast: இளைஞர்களின் அடாவடிக்கு எதிராக புகாரளித்த இளம்பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. மதுரையில் பயங்கரம்.! 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடியிருப்புவாசிகள் பாதுகாவலர்களுக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் காவல் துறையினருக்கு தகவலை கூறியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நடத்திய சோதனையில், 2 ரஷ்ய சுற்றுலாப்பயணிகள் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரும் ரஷிய யூடியூபர்கள் ரோமன் ப்ரொஷின் (வயது 33), மாக்சிம் ஷிசேர்பகோவ் (வயது 25) என்பது உறுதியானது. இவர்கள் இரட்டை கோபுர பகுதியில் அனுமதியின்றி வீடியோ பதிவு செய்தபோது பொதுமக்களால் கவனிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, ரஷிய யூடியூபர்கள் மீது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 452, 34 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இருவரையும் கைது செய்துள்ளனர். ரஷிய தூதரக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 27, 2022 12:42 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).