அக்டோபர் 21, பாண்டிச்சேரி (Puducherry News): தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடிக்கிறது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும் (Tamil Nadu Red Alert) விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் வடகடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் கனமழை தொடருகிறது. இன்றும், நாளையும் ரெட் அலர்ட் (Tamil Nadu Weather Alert) எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. வானிலை: 25 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. இடி, மின்னலுடன் மழை வெளுக்கும்.!
புதுச்சேரியில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு (Holiday Declared Due to Heavy Rains):
இந்நிலையில், புதுச்சேரி, காரைக்கால் பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. கனமழை தொடருவதால் விடுமுறை வழங்கப்படுவதாக அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் புதுச்சேரி மாநிலத்தில் கனமழை தொடரும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் தீபாவளி விடுமுறையுடன் மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை கிடைத்துள்ளது. வடகடலோரம் & டெல்டா மாவட்டங்களிலும் கனமழை தொடரும் என்பதால், விரைவில் தமிழ்நாட்டில் உள்ள மழைபெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.