வானிலை: 25 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. இடி, மின்னலுடன் மழை வெளுக்கும்.!
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 25 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அக்டோபர் 21, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. இன்று காலை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மதியம் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழக புதுவை தெற்கு ஆந்திர கடலாரப்பகுதிகளுக்கு அப்பால் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது அதற்கடுத்த 24 மணி நேரத்தில், மேலும் மேற்கு-வடமேற்கு திசையில், வடதமிழக புதுவை தெற்கு ஆந்திர கடலாரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து, மேலும் வலுவடையக்கூடும். Red Alert: தமிழ்நாட்டில் கனமழை தீவிரம்.. ரெட் அலர்ட் மாவட்டங்களுக்கு அவசரகால எண்கள் அறிவிப்பு.!
இன்றைய வானிலை (Today Weather):
இன்று தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் அதிகனமழைக்கான சிகப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும், அரியலூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், விழுப்புரம், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்துள்ளது.
சென்னை வானிலை (Chennai Weather):
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
(The above story first appeared on LatestLY on Oct 21, 2025 07:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

