ஏப்ரல் 20, புவனேஸ்வர் (Odisha News): ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜர்சுகுடா மாவட்டம், மகாநதி ஆற்றில் (Mahanadi River) படகு ஒன்றில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அதில் பயணம் செய்துள்ளனர். திடீரென ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து உடனடியாக வந்த மாநில பேரிடர் மீட்பு படையினர், தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். Dog Return Home after Treatment: திருடனை பிடிக்க முயற்சித்து குண்டடிபட்ட நாய்; 54 நாட்களுக்கு பின் உடல்நலம் முன்னேற்றம்.. கைதட்டி மகிழ்ச்சி.!

இச்சம்பவத்தில் இதுவரை சுமார் 40 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 3 குழந்தைகள் உட்பட 7 பேர் காணவில்லை. அவர்களை தேடும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதில், 35 வயது பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார் என தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயா கோயல், மீட்பு பணிகளை பார்வையிட்டார். மேலும், புவனேஸ்வரில் இருந்து ஸ்கூபா நீச்சல் வீரர்கள் வரவழைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.