ஏப்ரல் 20, ட்ரெண்டிங் செய்திகள் (Trending Video): வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள் நன்றி உள்ளவையாக, மனிதர்களுக்கு பாதுகாப்பாக பல ஆண்டாண்டுகளாய் இருந்து வருகின்றன. இன்றளவில் பல மேலை நாடுகளில் நாய்களின் மீதான எதிர்பார்ப்பு மற்றும் கண்டுபிடிப்பு போன்றவை நாய்களையும் ஆக்ரோஷமாக மாற்றி இருக்கிறது. ஆனால், அன்புடன் குடும்பத்தை பராமரிக்கும் செல்லப்பிராணிகளிலும் இங்கு இருக்கின்றன. MS Dhoni Hits 101 Meters Six: 101 மீட்டர் சிக்ஸ் அடித்து மைதானத்தை அதிரவைத்த தல தோனி; மிரண்டுபோன ரசிகர்கள்.!
மருத்துவ சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய நாய்: இந்நிலையில், வீட்டிற்குள் புகுந்த திருடனை விரட்டியடிக்க முயன்ற நாய், திருட்டு கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் பலமுறை தாக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிசூட்டில் காயமும் அடைந்துள்ளது. நல்வாய்ப்பாக உரிமையாளரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லக்கி என்ற நாய், அதிஷ்டவசமாக 54 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி வீட்டிற்கு திரும்பி அனுப்பி வைக்கப்பட்டது.
அச்சமயம் மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் லக்கியின் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து லக்கியை கைதட்டி ஆரவாரப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்றதாக தெரியவரும் நிலையில், அதன் காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது.
This Dog named Lucky was shot many times while fighting robbers who broke into his house. Lucky won the fight for his life, which lasted 54 days, having three surgeries. Lucky was sent home from the hospital as a hero. 💛🤗💛 pic.twitter.com/13NEY5flU5
— Restoring Your Faith in Humanity (@HumanityChad) April 15, 2024