Fire Accident (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 01, கொல்கத்தா (West Bengal News): மேற்கு வங்க மாநிலம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பதார் பிரதிமா என்ற இடத்தில் ஒரு வீட்டில், நேற்று (மார்ச் 31) இரவு திடீரென சமையல் சிலிண்டர் (Gas Cylinder) வெடித்து சிதறியது. இந்த விபத்தில், 4 குழந்தைகள், 2 பெண்கள் உட்பட மொத்தம் 7 பேர் பலியாகினர். Woman Elopes with Nephew: மருமகனுடன் கள்ளக்காதல்.. மகளின் திருமண நகையுடன் ஓட்டம் பிடித்த 5 குழந்தைகளின் தாய்.!

சமையல் சிலிண்டர் வெடித்து சிதறல்:

விபத்து குறித்து தகவலறிந்து வந்த மீட்புப் படையினர், சம்பவ இடத்திற்கு சென்று, பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதன் முதற்கட்ட விசாரணையில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்ததாகவும், அதிலிருந்து தீ பரவியதால், அருகில் இருந்த சமையல் சிலிண்டர் வெடித்து சிதறியதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.