UP Love Story Case 31 March 2025 (Photo Credit: @ManojSh28986262 X)

மார்ச் 31, சித்ரகூட் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்ரகூட் மாவட்டம், பஹாரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பர்ஸோவ்ஜா கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 51 வயதுடைய நபர் தனது மனைவி, 2 பெண் மற்றும் 3 ஆண் என 5 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இதனிடையே, 51 வயது நபரின் மனைவிக்கு, அதே கிராமத்தில் வசித்து வரும் மருமகன் உறவுமுறை கொண்ட நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது. Chennai Shocker: கருணாஸ் கட்சியின் வழக்கறிஞர் கொடூரமாக வெட்டிக்கொலை.. சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு வலைவீச்சு..! 

கள்ளக்காதல் உறவால் அதிர்ச்சி:

கள்ளக்காதல் ஜோடி இருவரும் மகிழ்ச்சியாக தனிமையில் இருந்து வந்துள்ளனர். இதனிடையே, இவர்களின் விவகாரம் வெளியே தெரியவர, தனது மூத்த மகளின் திருமணத்துக்கு சேர்த்து வைத்திருந்த நகையை எடுத்துக்கொண்டு, கள்ளக்காதலரான மருமகன் உறவுமுறை கொண்டவருடன் ஓட்டம் பிடித்தார். இந்த விஷயம் மிகப்பெரிய அதிர்வலையை உண்டாக்கிய நிலையில், கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், மனைவியின் செயல் குறித்து குழந்தைகளுடன் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.

மனைவியின் செயல் குறித்து கணவர் அளிக்கும் பேட்டி: