ஆகஸ்ட் 02, தானே (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் பகுதியில் சகஜானந்த் சவுக்கில் இன்று (ஆகஸ்ட் 02) காலை 10.30 மணியளவில், விளம்பர பலகை (Billboard) ஒன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அதன் கீழே இருந்த வாகனங்கள் சேதமடைந்துள்ளது.
அப்பகுதியில் பெய்து வரும் இடைவிடாத மழைக்கு மத்தியில், கடையின் மேல் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகை ஒன்று இடிந்து விழுந்த பயங்கர காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த வீடியோவில் ஒரு பெண் ஒருவர் விபத்து ஏற்படும் நேரத்திற்கு சற்று முன்னர் வெளியே சென்றுள்ளார். மறுபுறம், மற்றொரு நபர் அந்த பகுதிக்குள் நுழைவதை பார்க்க முடிகிறது. Children Have Complained Against Their Parents: மொபைல், டிவியை தடை செய்த பெற்றோர் மீது குழந்தைகள் புகார்..!
இதில் எந்தவித உயிர்சேதமும், காயங்களும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதன் வீடியோ காட்சிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
#WATCH | Maharashtra: A wooden hoarding collapsed at Sahajanand Chowk of Kalyan in Thane at 10:18 am this morning. No casualties reported, 3 vehicles were damaged in the incident.
(Source: District Information Officer, Thane) pic.twitter.com/daMjcqFhOi
— ANI (@ANI) August 2, 2024