டிசம்பர் 28, டெல்லி: தோழிகளுடன் சர்ச்சுக்கு சென்றபின்னர், வீட்டிற்கு திரும்பிய சிறுமி பலாத்காரம் செய்ய முயற்சிக்கப்பட்ட (Minor Girl Moleastion) சம்பவத்தில் தலைமறைவு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்மேற்கு டெல்லியில் இருக்கும் சாகர்பூர் (Sagarpur, Southwest Delhi) பகுதியில் 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை நண்பர்களுடன் சர்ச்சுக்கு சென்றுவிட்டு, மீண்டும் தனது இல்லத்திற்கு திரும்பிக்கொண்டு இருந்தார்.
அப்போது, இதே பகுதியில் வசித்து வரும் 50 வயதுடைய நபர், இரவு 8 மணியளவில் சிறுமியை தனிமையான பகுதிக்கு இழுத்து சென்று பலாத்காரம் செய்வதுபோல அடித்து, துன்புறுத்தி பாலியல் தொல்லை கொடுத்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். Twitter Account: டார்க் வெப்பில் விற்பனைக்கு தயார் நிலையில் ட்விட்டர் கணக்குகள்.. 40 கோடி பயனர்களின் விபரம் திருடப்பட்டது அம்பலம்..!
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்த துயரத்தை பெற்றோரிடம் விவரிக்க, அவர்கள் சாகர்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தலைமறைவாக இருந்த குற்றவாளியை இன்று கைது செய்தனர்.
சிறுமி புகார் பெறப்பட்டபோது மருத்துவ பரிசோதனை & சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். கிறிஸ்துமஸ் விழா கொண்டாட சர்ச் சென்ற சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.