Strange Result of Visakhapatnam (Photo Credit: @TeluguScribe X)

ஜூன் 04, (Andhra Pradesh News): 2024 இந்தியா தேர்தல்களுடன், ஆந்திரப்பிரதேசம் (AP Poll Results 2024) மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலில் தேசிய அளவில் பாஜக 290 தொகுதிகள் முன்னிலை பெற்றும், காங்கிரஸ் 235 தொகுதியில் முன்னிலையிலும் இருக்கிறது. ஆட்சி அமைக்க தேவையான 272 தொகுதிகளில் பாஜக நடப்பு மக்களவை தேர்தலில் வெற்றிபெறவில்லை என்பதால், ஆட்சி அமைப்பது குறித்து இருதரப்பிலும் சாதகமான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாளை காங்கிரஸ் தலைமை தனது கூட்டணிக்கட்சிகளுடன் இதுதொடர்பாக ஆலோசனையில் ஈடுபடவுள்ளது.

தெலுங்கு தேசம் மிகப்பெரிய வெற்றி: ஆந்திர மாநிலத்தை பொறுத்தமட்டில் ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்று வந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, அம்மாநிலத்தில் தெலுங்குதேசம், ஜனசேனா, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஒன்றாக செயல்பட்டது. இதனால் தற்போது அங்குள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 150+ தொகுதிகளை சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கூட்டணி கைப்பற்றி இருக்கிறது. 17+ தொகுதிகளை மட்டும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கைப்பற்றி படுதோல்வி அடைந்துள்ளது. TN Weather Update: இரவு 8 மணிவரை வெளுத்தது வாங்கப்போகும் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.! 

இந்த தேர்தல் ஆந்திர மாநில அரசியலை புரட்டிபோட்டுள்ளது. ஜெகன் மோகன் ஆட்சிக்கு வந்த பின்னர், சந்திரபாபு நாயுடு சிறையிலும் அடைக்கப்பட்டு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை நடைபெற்றது. அக்கட்சியின் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சராக இருந்த நடிகை ரோஜா, தெலுங்கு தேசம் கட்சியை கடுமையாக விமர்சித்து இருந்தார். தேர்தலுக்கு பின்னர் இரண்டு கட்சியினர் சார்பிலும் மக்களுக்கு பணப்பட்டுவாடா உட்பட தேர்தல் தொகுப்புகள் கொடுக்கப்பட்டதாக பல சர்ச்சை விடியோக்கள் வெளியாகி வந்தன.

வேட்பாளரை கைவிட்ட குடும்பம்? இந்நிலையில், ஆந்திரப்பிரதேசம் மாநிலம் விசாகபட்டினத்தை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் கேஏ பால், தேர்தலில் தோல்வியை சந்தித்தார். அவரின் குடும்பத்தில் மொத்தம் 22 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், அவருக்கு மொத்தமாகவே 4 வாக்குகள் தான் கிடைத்ததாம். இதனால் மனமுடைந்த அவர், தனது வேதனையை ஊடகத்தினரிடம் தெரிவித்தவாறு சென்றார்.

அதாவது, விசாகப்பட்டினம் தொகுதியை பொறுத்தமட்டில் 33 வேட்பாளர்கள் மக்களின் முடிவுக்காக காத்திருந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஸ்ரீபாரத் மதுக்கமுளி 82,0427 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அதே வேளையில், அத்தொகுதியில் கே.ஏ பால் (KA Paul) என்ற கிளரி ஆனந்த பால் வேட்பாளராக களமிறங்கினார். இவர் இந்திய - அமெரிக்கன் மிஷினரி ஆவார். சர்வதேச அளவில் ஈராக், சூடான், லைபீரியா ஆகிய நாடுகளில் அமைதிக்காக உழைத்தவர், விசாகப்பட்டினம் தேர்தலில் போட்டியிட்டு குடும்பத்தினர் வாக்கை கூட பெறாமல் தோல்வி அடைந்துள்ளார்.