Stray Dog Byte (Photo Credit: Twitter)

ஜூன் 21, பாலக்காடு (Kerala News): கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டம், கலங்கோடு பச்சைக்கரா கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவரின் மகள் ஜான்வியா (வயது 9). சிறுமி சம்பவத்தன்று தனது வீட்டின் பின்புறத்தில் இருந்தார். அப்போது, அவரது வீட்டின் பின்வழியே வந்த தெருநாய்கள், சிறுமியை திடீரென கடுமையாக தாக்கியுள்ளது.

3 நாய்கள் ஒன்று சேர்ந்து சிறுமியின் தலை, கை உட்பட உடல் பகுதியில் கடுமையாக தாக்கியுள்ளது. சிறுமியின் அழுகுரல் கேட்டு வந்த முதியவர், வீட்டின் சுவரில் ஏறி பார்த்தபோது உண்மை புரியவந்துள்ளது.

அவர் சிறுமியை காப்பாற்ற சுவர் ஏறுவதற்குள், சிறுமியின் குடும்பத்தினர் விரைந்து வந்து நாயை துரத்திவிட்டு சிறுமியை மீட்டனர். அவர் சிகிச்சைக்காக கண்ணூர் முழப்பிலங்காடு பகுதியில் செயல்படும் ஜிம்கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார்.

நம் குழந்தை வீட்டின் வாசலில் தானே விளையாடுகிறார், கதவு திறந்திருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை என பல பெற்றோர்கள் அலட்சியத்துடன் செயல்படுகின்றனர். இவ்வாறான செயல்கள் பெரும் சோகத்தை தரும். ஆகவே பெற்றோர்களே உஷாராக இருங்கள்.