ஜனவரி 01, லக்னோ (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ (Lucknow) மாவட்டம், நாகா பகுதியில் தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. நடுத்தர தங்கும் விடுதியில், கடந்த டிசம்பர் 30ம் தேதி குடும்பத்தினர் அறையெடுத்து தங்கி இருக்கின்றனர். இதனிடையே, இன்று காலை இவர்களின் அறையில் ஆட்கள் (Family Murdered in Lucknow) நடமாட்டம் இல்லாத நிலையில், விடுதி ஊழியர்கள் கதவை திறக்க முறைப்பட்டுள்ளனர். அப்போது, உள்ளே இருந்த நபர், ஊழியர்களை எச்சரித்து இருக்கிறார். அந்த அறையில் மொத்தமாக தாயுடன் 6 பேர் இருந்த நிலையில், இவர்களின் சத்தம் கேட்டு இருக்கிறது. 19-Year-Old Girl Gang Raped: 19 வயது இளம்பெண் 6 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை; ஆண் நண்பரை மரத்தில் கட்டிப்போட்டு கண்முன் துயரம்.!
தாய், தங்கைகள் கொலை:
இதனால் விபரீதம் எதோ நிகழ்ந்துள்ளது என்பதை உணர்ந்த ஊழியர்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அறையின் கதவை திறந்து சென்று பார்த்தபோது 5 இளவயதுடைய நபர்கள் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தது அம்பலமானது. இவர்களின் உடலை மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் இருந்த அர்ஷத் என்ற 24 வயதுடைய நபரை கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில், சொந்த குடும்பத்தினரை, குடும்பச் சண்டையில் கொடூரமாக கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
காவல்துறை விசாரணை:
இதுதொடர்பான விசாரணையில், ஆக்ரா மாவட்டத்தில் உள்ள ஷரன்ஜீத் பகுதியில் வசித்து வரும் குடும்பத்தினர் ஆஸ்மா. இவரின் குழந்தைகள் அர்சத் (ஆண்/வயது 24), பெண் குழந்தைகள் ரஹ்மீன் (வயது 18), ஆக்சா (வயது 16), ஆல்ஷியா (வயது 19), ஆலியா (வயது 9). இவர்கள் அனைவரும் ஆக்ராவில் இருந்து டிச.30 அன்று லக்னோவுக்கு வந்து, தனியார் தங்கும் விடுதியில் அறையெடுத்து தங்கி இருக்கின்றனர். பின் டிசம்பர் 31 அன்று இரவு எழுந்த குடும்ப பிரச்சனையில், அர்ஷத் தனது தாய், தந்தைகளை பிளேடால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் அர்ஷத் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அதிகாரிகளிடம் வாக்குமூலத்தில் குடும்ப பிரச்சனையால் கொலை செய்தேன் என மட்டுமே தெரிவித்துள்ளார். இதனால் கொலைக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல் உயர் அதிகாரிகள் குற்றம் நடந்த இடத்தில் முகாமிட்டுள்ள காட்சிகள்:
न्यू ईयर पर लखनऊ के होटल में 5 मर्डर
24 साल के अरशद ने अपनी मां असमा और 4 बहनों की हत्या कर दी। ये परिवार आगरा में कुबेरपुर का रहने वाला है। आरोपी अरशद को पुलिस ने गिरफ्तार किया। पारिवारिक विवाद में सामूहिक नरसंहार की बात सामने आई। pic.twitter.com/7QuENPYmNH
— Sachin Gupta (@SachinGuptaUP) January 1, 2025