Young Woman Murder Case in UP (Photo Credit: @TrueStoryUP X)

ஆகஸ்ட் 02, படவுன் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், படவுனில் கடந்த ஜூலை 28-ஆம் தேதி அன்று மீரா என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இளம்பெண்ணின் கணவர் ஆகாஷ், அவரது காதலி பூஜா மற்றும் நண்பர் ரூபேந்திரா ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட மீராவின் கணவர் ஆகாஷ், ஏற்கனவே பூஜா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், மீராவுடன் திருமணமான பிறகு, தனது மனைவி வேறு யாரிடமாவது பேசுகிறாள் என்று ஆகாஷ் சந்தேகப்பட்டார். இதனால், மனைவியின் போனில் சிப் ஒன்றை வைத்தார். அவர் செல்போன் அழைப்புகளை பதிவு செய்து அதனை கேட்டு வந்துள்ளார். அதில், அவர் வாலிபர் ஒருவருடன் தொடர்ந்து பேசுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இவருடைய சந்தேகம் நிரூபணமானதால், கடந்த ஜூலை 25-ஆம் தேதி, இவர் வெளியில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு, தனது மனைவியை விருந்தாவன் கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் விட்டு சென்றார். பின்னர், இவர் அவரது காதலி பூஜாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். Billboard Collapsed: விளம்பர பலகை சரிந்து விழுந்து விபத்து; பல வாகனங்கள் சேதம்.. வீடியோ வைரல்..!

இதனையடுத்து, ஜூலை 27-ஆம் தேதி அன்று தனது மனைவி பூஜாவை கொலை செய்ய திட்டமிட்டு உடன் அவரது காதலி பூஜா மற்றும் நண்பர் ரூபேந்திரா ஆகியோருடன் சேர்ந்து, விருந்தாவன் காட்டுப்பகுதிக்குள் வைத்து, மீராவின் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு சடலத்தின் கை, கால்களை கட்டி தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். பின்னர், நீண்ட நேரமாகியும் தனது தங்கையை காணவில்ல என அவரது அண்ணன் தேடியுள்ளார். அவருடன் சேர்ந்து தேடுவது போல் மீராவின் கணவர் ஆகாஷ் நடித்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.