Crime Scene (Photo Credit: Pixabay)

ஜூலை 08, டெல்லி (Delhi News): தலைநகர் டெல்லியின் (Delhi) நஜாஃப்கரில் உள்ள சிறுமியின் வீட்டில் 16 வயது சிறுவனும் ஒரு சிறுமியும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் (ஜூலை 06) மாலை துவாரகாவின் நஜாஃப்கரின் நாக்லி பகுதியில் நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். Trending Video: மெட்ரோவில் ஆபாச நடனமாடிய பெண்.. ரீல்ஸ் பெயரில் அநாகரீகம்.!

காதல் விவகாரம்:

இதுகுறித்து காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில், 2 பேரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இது அவர்களது குடும்பங்களுக்கு இடையே பிரச்சனையை ஏற்படுத்தியது. இதன்பின்னர் இருதரப்பினரும் சமரச பேச்சு வார்த்தை நடத்தி சென்றுள்ளனர். இந்நிலையில், சிறுமியின் வீட்டின் ஒரு அறையில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆரம்பகட்ட பரிசோதனையின் போது வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படவில்லை. அறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது. பிரேத பரிசோதனையின் முடிவில் தான் உண்மை தெரியவரும்.

போலீஸ் விசாரணை:

இதனிடையே உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர், சிறுமியின் உறவினர்கள் தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர். சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக சிறுமியின் வீட்டிற்கு அழைக்கப்பட்டு சிறுவனை கொலை செய்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும், சிறுமியின் மாமா சிறுவனைக் கொலை செய்வதாக மிரட்டியதாகவும் குடும்பத்தினர் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். இதனால், காவல்துறையினர் பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.