Died Boy Mohammad Sarfaraz (Photo Credit: Twitter)

மே 06, ஹைதராபாத் (Telangana News): இன்றளவில் உள்ள இளம் தலைமுறை Craze, Vibe என்ற பெயர்களால் தங்களின் எதிர்காலம் குறித்து எவ்வித அச்சமும் இன்றி வாழ்க்கையை சந்தோஷமாக வாழுவதாக மாயையில் உலாவி வருகிறது. இவ்வாறான இளைஞர்கள் கூட்டம் சில நேரங்களில் செய்யும் செயல்கள் அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடுகிறது.

கடந்த ஆண்டில் செங்கல்பட்டு (Chengalpattu) மாவட்டத்தை சேர்ந்த 3 சிறார்கள் இரயில் தண்டவாளத்தில் (Railway Track) நின்று இன்ஸ்டாகிராம் ரீலிஸ் (Instagram Reels) வீடியோ பதிவு செய்தபோது, அவ்வழியே வந்த மின்சார இரயில் மீது மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைப்போன்ற பல்வேறு துயரங்கள் அங்கு நடந்துள்ளன. அதே போன்ற துயரம் நேற்று ஹைதராபாத்தில் (Hyderabad) நடந்துள்ளது.

தெலுங்கானா (Telangana) மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், சனத் நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் முகம்மத் சர்ப்ராஸ் (வயது 16). சிறுவன் அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், வெள்ளிக்கிழமையான நேற்று சிறுவன் மசூதிக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டு இருக்கிறான். Samyuktha Hegde: கடற்கரையில் நீச்சல் உடையுடன் அதகளம் செய்த கோமாளி நடிகை; கிக்கேற்றும் இன்ஸ்டா வீடியோ வைரல்.!

பின்னர் தனது நண்பர்களான முசம்மில் மற்றும் சோஹைல் ஆகியோருடன் அங்குள்ள இரயில்வே தண்டவாள பகுதிக்கு சென்றுள்ளான். அங்கு சிறுவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவேற்ற இரயில் வரும்போது தண்டவாளத்திற்கு அருகில் இருந்து வீடியோ எடுத்ததாக தெரியவருகிறது.

இந்நிலையில், சிறுவன் தண்டவாளத்திற்கு மிக நெருக்கமாக சென்ற நிலையில், அவ்வழியே வந்த இரயில் சிறுவனின் மீது மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் சிறுவன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் நண்பர்கள் சிறுவனை இறுதி நொடியில் காப்பாற்ற முயற்சித்தும் பலனில்லை.

சம்பவம் நடந்ததும் முகம்மத்தின் நண்பர்கள் விரைந்து அவரின் வீட்டிற்கு சென்று சிறுவனின் தந்தையிடம் நடந்ததை கூறியுள்ளனர். அவர் வந்து பார்த்தபோது மகனின் இறப்பு உறுதியானது. இதற்கிடையே இரயில் ஓட்டுநர் இரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், இரயில்வே காவல் துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சிறுவனின் இறுதி நொடிகளில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.