ஜூன் 22, அமராவதி (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பாபட்லா மாவட்டம், எப்ருபாலம் கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், அப்பகுதியில் உள்ள ரயில் பாதை அருகே இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார். அதிகாலை 5.30 மணிக்கு சென்ற அவர், நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்ப வராததால், குடும்பத்தினர் பல்வேறு பகுதிகளில் அவரை தேடி வந்துள்ளனர். USA Vs WI Highlights: சாய் ஹோப் அதிரடி ஆட்டம்; அமெரிக்காவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி..!
இந்நிலையில், அவர் அப்பகுதியில் உள்ள பள்ளி அருகே முட்புதர்களில் நிர்வாணமாக (Naked Deadbody) உயிரிழந்து கிடப்பதை கண்டு, குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இதனையடுத்து, காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரித்து வருகிறார்கள். குற்றவாளியை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து, தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.