
பிப்ரவரி 18, சென்னை (Festival News): மகா சிவராத்திரி (Maha Shivaratri) என்பது சிவபெருமானை வழிபாட்டு கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகையாகும். இந்நாள் சிவனின் திருமண நாளைக் குறிக்கிறது. குளிர்காலத்தின் இறுதியில் அல்லது கோடை காலம் வருவதற்கு முன்பு இந்த நாள் வருகிறது. இது 'சிவனின் இரவு' என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்த விழா பால்குன் மாதத்தில் அமாவாசையின் 14ஆம் தேதி இரவு வருகிறது. அன்றைய தினம் பக்தர்கள் இரவும் பகலும் விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுகிறார்கள். மகா சிவராத்திரி நாளில் இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள், குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கண்விழித்து, சிவபெருமானை வழிபடுவதால் விரதம் இருந்து, கண் விழித்த பலனும், சிவபெருமானின் அருளும், நினைத்த காரியங்களில் வெற்றியும் கிடைக்கும். இந்த 2025ஆம் ஆண்டு, மகா சிவராத்திரி பிப்ரவரி 26ஆம் தேதி, புதன்கிழமை அன்று வருகிறது.
மகா சிவராத்திரி:
சிவபெருமானுக்குரிய (Lord Shiva) மிக முக்கியமான வழிபாட்டு நாளாக மகா சிவராத்திரி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி தினத்தில், மகா சிவராத்திரி விழா சிறப்பிக்கப்படுகிறது. சிவபெருமான், பார்வதி தேவியை திருமணம் செய்துகொண்ட நாளையே மகா சிவராத்திரி தினமாக கொண்டாடுவதாக புராணங்களில் கூறப்படுகிறது. அன்று, மக்கள் சிவபெருமானையும் பார்வதியையும் வழிபடுகிறார்கள். இந்நாளில் சிவ பெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அன்றைய தினம், மாலை வேளையில் இருந்து இரவு முழுவதும் சிவபெருமானுக்கு நான்கு கால பூஜைகள் நடத்தப்படும். Sani Peyarchi Palan 2025: சனிப் பெயர்ச்சி 2025: கும்பம் ராசிக்கு ஏழரை சனி எப்படி இருக்கப் போகுது தெரியுமா? விபரம் உள்ளே.!
மகா சிவராத்திரி பூஜை:
மகா சிவராத்திரி (Maha Shivaratri Puja) அன்று, சிவ வழிபாடு செய்வதற்கு நேரம் காலம் பார்க்க வேண்டியது இல்லை. ராகு காலம், எமகண்டம் உள்ளிட்ட எந்த கெட்ட நேரங்களின் பாதிப்பும் சிவ வழிபாட்டை பாதிக்க இயலாது. மகா சிவராத்திரி பூஜைகள் என்பது மாலை 6 மணிக்கு துவங்கி, மறுநாள் காலை 6.30 மணி வரை நடைபெறும். மொத்தம் நான்கு கால பூஜைகள் நடத்தப்படும். ஒவ்வொரு கால பூஜையும் சுமார் 3 மணிநேரம் நடைபெறும்.
சிவனை வழிபட உகந்த நேரம்:
மகா சிவராத்திரியின் நான்கு கால பூஜைகளில் மிகவும் முக்கியமானது மூன்றாம் கால பூஜை தான். இது, நள்ளிரவு 12 மணிக்கு துவங்கி, அதிகாலை 3 மணி வரை நடைபெறும். மூன்றாம் கால பூஜையின் முதல் 50 நிமிடங்கள் மிக மிக முக்கியமானதாகும். இந்த நேரத்தில் செய்யப்படும் பூஜைக்கு 'நிஷித கால பூஜை' என்று பெயர். இது தான் சிவ பெருமானை வழிபடுவதற்கு (Shiva Vazhibadu) மிகவும் உகந்த நேரமாகும். இந்த 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி மகா சிவராத்திரி அமைந்துள்ளது. அன்றைய தினம், இரவு 12.09 முதல் 12.59 வரையிலான நேரத்தில் சிவனிடம், என்ன வேண்டிக் கொண்டாலும் அது நடைபெறும். சிவன் பக்தர்கள் அனைவரும், நினைத்த காரியங்களை நிறைவேற்ற இந்த நேரத்தில் பக்தியுடன் வேண்டிக் கொள்ளலாம்.
விரதத்தை நிறைவு செய்யும் நேரம்:
மூன்றாம் கால பூஜை என்பது பார்வதி தேவி (Lord Parvati), சிவ பெருமானை வழிபட்ட காலமாகும். அந்த சமயத்தில் வழிபட்டால் சிவபெருமானின் அருளும், பார்வதி தேவியின் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மகா சிவராத்திரி விரதம் பிப்ரவரி 27ஆம் தேதி அதிகாலையில் தான் நிறைவடையும். அதனால் அன்று காலை 7 மணிக்கு பிறகு விரதத்தை நிறைவு செய்வதால் செல்வ வளமும், சிவபெருமானின் முழுமையான அருளும் கிடைக்கும். விரதத்தை நிறைவு செய்ய இதுவே உகந்த நேரமாகும்.
விரத பலன்கள்:
மகா சிவராத்திரி அன்று, நாள் முழுவதும் சிவபெருமானை வேண்டி விரதம் (Maha Shivaratri Fasting) இருந்து, வழிபட்டால் விருப்ப காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். துன்பங்கள் நீங்கி, முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். சிவ பெருமானின் பரிபூரண அருளை பெறுவதற்கு ஏற்ற நாளாக மகா சிவராத்திரி விழா அமைகிறது. மகா சிவராத்திரி அன்று ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சிவ பெருமானை வழிபட்டால், நினைத்த காரியங்கள் அனைத்தும் அப்படியே நடக்கும் என்றும் சொல்லப்படுகிறது.