சுற்றுலாவிற்கு அழைத்து சென்று பெண் கொலை.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!
உத்தர பிரதேசத்தில் பெண் ஏரியில் தள்ளி கொலை செய்த வழக்கில், அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூலை 11, ஜலான் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், ஜலான் (Jalaun) மாவட்டத்தைச் சேர்ந்தவர் புஷ்பா. இவர், கடந்த மே 27ஆம் தேதி அன்று, ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து விசாரணையில், அவர் தனது காதலரான அபிஷேக் என்பவரால் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. அவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். காதலி IPS ஆக வேண்டி 220 கிமீ பாதயாத்திரை சென்ற காதலன்.. நெகிழ்ச்சி சம்பவம்.!
பெண் கொலை:
இதில், அபிஷேக் என்பவர் புஷ்பாவின் குழந்தைகளுக்கு டியூஷன் ஆசிரியராக இருந்தார். குழந்தைகளுக்கு பாடம் நடத்திய பிறகு, அவரது வீட்டில் இருந்துள்ளார். கணவர் இல்லாத நிலையில், இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனையடுத்து, புஷ்பா தனது காதலனுடன் டெல்லிக்கு சென்றார். அங்கு தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு புஷ்பா தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அபிஷேக்கிற்கு திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை. இதனால், அவரை கொலை செய்ய திட்டமிட்டு, சுற்றுலா என்ற பெயரில் அழைத்து சென்று இருவரும் ஏரிக்கரையில் மது அருந்தினர். பின்னர், புஷ்பாவை ஏரியில் தள்ளி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jul 11, 2025 03:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

