Central Govt Of India Logo (Photo Credit: Wikipedia)

ஜூன் 22, டெல்லி (Delhi News): அரசு ஊழியர்கள் முறையாக பணிகளை மேற்கொள்ள சிறந்த நடவடிக்கையாக, மூத்த அதிகாரிகள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களும் காலை 9.15 மணிக்குள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று, மத்திய பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை (DoPT) அறிவுறுத்தியுள்ளது. எந்த காரணத்திற்காகவும், ஒரு குறிப்பிட்ட நாளில் அரசு பணியாளரால் அலுவலகத்திற்கு வர முடியாவிட்டால், அதை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் மற்றும் சாதாரண விடுப்புக்கு (Casual Leave) விண்ணப்பிக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. Schemes Announced In The TN Legislative Assembly: தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய திட்டங்களின் விவரம் இதோ..!

பொதுவாக மத்திய அரசு அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை இயங்குகிறது. ஆனால், அலுவலக பணியாளர்கள் தாமதமாகவும், வேலை நேரம் முடியும் முன்னரே கிளம்பி செல்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் முயற்சியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொதுமக்கள் இதனால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மூத்த அதிகாரிகள் வழக்கமான அலுவலக நேரத்தைத் தாண்டி வேலை செய்கிறார்கள், பெரும்பாலும் இரவு 7 மணிக்குப் பிறகு வெளியேறுகிறார்கள் என்று கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு உத்தரவில், மத்திய அரசு ஊழியர்களை பயோமெட்ரிக் வருகைப் (Attendance) பதிவு செய்ய வலியுறுத்தியது. இது வழக்கமான தாமதம் மற்றும் முன்கூட்டியே செல்வதை தவிர்க்க சிறந்த வழிமுறையாகும். இந்த புதிய நடவடிக்கை அரசு பணியாளர்கள் அதிக ஒழுக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், மத்திய அரசின் அலுவலகங்களில் நல்ல செயல்திறன் மேம்பாட்டை உறுதி செய்யும் என தெரிகிறது.