ஆகஸ்ட் 14, காசியாபாத் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத்தில் சிறுமி ஒருவர் ரீல்ஸ் எடுக்கும் போது, ஆறாவது மாடியில் இருந்து தவறி விழுந்தார். காசியாபாத் (Ghaziabad) மாவட்டத்தில் உள்ள இந்திரபுரத்தில் ஒரு குடியிருப்பின் பால்கனியில் நின்றுகொண்டு மோனிஷா (வயது 16) என்ற சிறுமி செல்போனில் ரீல்ஸ் (Reels) எடுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, கையிலிருந்து போன் கீழே விழுந்தது. அதனை பிடிக்க முயற்சிக்கையில், சிறுமி 6-வது மாடி பால்கனியில் இருந்து தவறி கீழே விழுந்தார். Youngsters Dangerous Stunt Video: முத்திப்போன ரீல்ஸ் மோகம்.. லைக்குக்காக உயிரைப் பணயம் வைக்கும் நண்பர்கள்..!
இதனையடுத்து, சிறுமி தன்னை காப்பாற்றுமாறு அங்குள்ளவர்களிடம் உதவி கேட்டு கதறும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகின்றது. அந்த வீடியோவில் சிறுமிக்கு உதவுவதற்காக பல ஆண்கள் வந்து வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதை காணலாம். சிறுமிக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
UP के गाजियाबाद ई इंदिरापुरम सोसाइटी में 16 वर्ष की मोनिशा अपने फ्लैट की बालकनी में खड़ी होकर अपने मोबाइल से #insta वीडियो रील्स शूट कर रही थी। तभी उसके हाथ से मोबाईल छूट गया, जिसको पकड़ने के चक्कर मैं वह 6th फ्लोर से नीचे गिर गई। गंभीर हालत में उसे अस्पताल में भर्ती कराया गया।… pic.twitter.com/n054rSX0AQ
— TRUE STORY (@TrueStoryUP) August 13, 2024