ஆகஸ்ட் 16, டெல்லி (Delhi News): மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் (Kolkata) உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆகஸ்ட் 09-ஆம் தேதி பாலியல் வன்கொடுமை (Rape) செய்யப்பட்டு, கொலை (Kolkata Doctor Rape And Murder) செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதலில் இந்த வழக்கை மாநில காவல்துறை விசாரித்து வந்த நிலையில், உயிரிழந்த பெண் மருத்துவரின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில், கொல்கத்தா உயர் நீதிமன்றம் சிபிஐ (CBI) விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து, வழக்கு விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.
6 மணிநேரத்தில் எஃப்.ஐ.ஆர்:
இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபரான சஞ்சய் ராயை சிபிஐ அதிகாரிகள் இன்று (ஆகஸ்ட் 16) மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், ஆர்.ஜி கர் மருத்துவமனையின் 4 மருத்துவர்கள் நேரில் விசாரணைக்கு ஆஜராக சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி வைத்துள்ளனர். இதனிடையே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் (Union Ministry of Health) வெளியிட்டுள்ள உத்தரவில், "மருத்துவர்கள் தாக்கப்பட்டால் 6 மணி நேரத்தில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட வேண்டும். காவல்நிலையத்தின் முதல் தகவல் அறிக்கை பதிவு (FIR) செய்வதற்கான முழுப் பொறுப்பும் மருத்துவமனையின் தலைவருக்கு மட்டுமே உள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Young Girl Gang Rape: இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டல்.. 5 பேர் கைது..!
24 மணிநேர போராட்டம்:
மேலும், பெண் மருத்துவர் கொலை வழக்கில் கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 17 (நாளை) அன்று 24 மணிநேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் (Indian Medical Association) அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொல்கத்தா ஆர்.ஜி. மருத்துவ கல்லூரியில் நடந்த கொடூர சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் ஆகஸ்ட் 17 அன்று காலை 6 மணி முதல், ஆகஸ்ட் 18 (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி வரை 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.
அதே சமயம், அனைத்து விதமான அத்தியாவசிய சேவைகளும் செயல்படும். அவசர நோயாளிகளை மருத்துவர்கள் கண்காணிப்பர். ஆனால், வழக்கமான வெளிப்புற நோயாளிகளுக்கான (Out Patients) சிகிச்சைகள் செயல்படாது எனவும் அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகள் செய்யப்படாது எனவும் அறிவித்துள்ளது. மேலும், நவீன மருத்துவர்கள் தங்கள் சேவைகளை வழங்கும் அனைத்து துறைகளிலும் பணி புறக்கணிப்பு நடைபெறும். மருத்துவர்களின் நியாயமான போராட்டத்துக்கு தேசத்தின் ஆதரவை இந்திய மருத்துவர்கள் சங்கம் எதிர்பார்க்கிறது" என்று அதில் குறிப்பிட்டுள்ளது.
In the event of any violence against any healthcare worker while on duty, the Head of Institution shall be responsible for filing an Institutional FIR within a maximum of 6 hours of the incident: Ministry of Health and Family Welfare pic.twitter.com/2YGDZVRx8O
— ANI (@ANI) August 16, 2024