Crocodile (Photo Credit: Pixabay)

மே 14, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டம், சிக்கோடி தாலுகாவில் தூதகங்கா ஆறு ஓடுகிறது. இதில், நேற்று காலை அதே பகுதியைச் சேர்ந்த மகாதேவா புண்ணப்பா (வயது 72) என்ற முதியவர் ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு ஆற்றில் இறங்கி அவர் குளித்துக் கொண்டிருந்தார். Benefits Of Coriander Leaves: சிறுநீரக பிரச்சனைகளை சரிசெய்யும் கொத்தமல்லி கீரையின் பயன்கள்..!

அப்போது, ஆற்றில் திடீரென முதலை (Crocodile) ஒன்று வந்துள்ளது. ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் முதலை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், உடனடியாக ஆற்றில் இருந்து அனைவரும் கரைக்கு திரும்பினர். இந்நிலையில், முதியவர் கரைக்கு திரும்புவதற்குள் அவரை அந்த முதலை கடித்து, ஆற்றுக்குள் இழுத்துச் சென்றது. இதில், முதலையின் பிடியில் சிக்கிக் கொண்ட முதியவர் சத்தமிட்டு கத்தியுள்ளார். ஆனால், அவரை யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. முதலையின் கொடூரமான கடியால் படுகாயம் அடைந்த முதியவர் மகாதேவா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர், உயிரிழந்து கிடந்த முதியவரின் உடலை மீட்டனர், மேலும், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.