மே 14, சென்னை (Health Tips): கொத்தமல்லி இலை மற்றும் சாறு சிறுநீரகத்தை சுத்தப்படுத்த பெரிதும் உதவுகின்றது. சிறுநீரக குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரிசெய்கிறது. கிரேக்க மற்றும் ரோமன் நாடுகளில் கொத்தமல்லி கீரை பற்றிய குறிப்புகள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே வரைபடங்களாக இடம்பெற்றுள்ளன. இதனை பச்சைக் கீரையாகவும், உலர்ந்த விதைகளை தனியாவாகவும் சமையலில் பயன்படுத்தி வருகின்றோம். அந்தவகையில், கொத்தமல்லியில் (Coriander Leaves) உள்ள பல நன்மைகள் பற்றி இதில் பார்ப்போம்.

பயன்கள்: வயிறு மற்றும் நெஞ்சு எரிச்சலுக்கு கொத்தமல்லி சிறந்த மருந்தாக உள்ளது. கொத்தமல்லிக் கீரையை அரைத்து விழுதாகவோ அல்லது சாறு பிழிந்து நேரடியாகவே மருந்தாக உட்கொள்ளலாம். ஒரு மேசைக்கரண்டி கொத்தமல்லி விதையை தண்ணீரில் போட்டு ஊறவைத்து, அதனை காலையில் வெறும் வயிற்றில் பருகி வந்தால் வயிறு மற்றும் நெஞ்சு எரிச்சல் குணமாகும். 3 People Died After Gun Shoot: விருந்து நிகழ்ச்சியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு; 15 பேர் படுகாயம்..! 3 பேர் பலி..!

கொத்தமல்லி கீரை செரிமானத்தை தூண்ட உதவுகிறது. சிறுநீரக அழற்சி மற்றும் சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட நோய்களை சரிசெய்கிறது. மேலும், சிறுநீர் கழிக்கும்போது புரோட்டீன் போன்ற சத்துக்களும் உடலில் இருந்து வெளியேறிவிடும். இதற்கு கொத்தமல்லி கீரை தீர்வாக அமைகிறது. இதனை சாறாக எடுத்து தினமும் பருகி வந்தால், இவை அனைத்தும் சரியாகும்.

சிறுநீரகப் பையில் தசை மாற்றங்கள் விரிவுத் தன்மை குறைந்து, சிறுநீர் தங்குவதால் யூரினரி டிராக் இன்ஃபெக்ஷனால் சிரமப்படுவார்கள். இதற்கு தீர்வாக ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லிக் கீரையில் சாறு பிழிந்து, தினந்தோறும் தொடர்ந்து 48 நாட்கள் பருகிவர சிறுநீரக அழற்சி, சிறுநீரக அடைப்பு, சிறுநீரகப்பை சுருக்கம், சிறுநீரில் புரதம் வெளியேறுவது போன்ற பிரச்னைகள் குணமாகிறது.