
மார்ச் 03, கபூர்தலா (Punjab News): பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் மாவட்டத்தில் கபூர்தலாவில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு 22 வயது பெண் ஒருவர், கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் முதல் சென்று வருகிறார். அந்த தேவாலயத்தில் உள்ள பாதிரியார் பஜிந்தர் சிங், அப்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு (Sexual Abuse) அளித்துள்ளார். 22 வயது ஆன்லைன் காதலருடன் ஓட்டம் பிடித்த 35 வயது மனைவி.. 5 மாதமாக தேடித்திரியும் கணவன்.. பரிதவிப்பில் குழந்தைகள்.!
பாதிரியார் மீது வழக்கு:
இதனை அறிந்த பெற்றோர், கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், காவல்துறையினர் பாதிரியார் பஜிந்தர் சிங் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிரியார் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 354 ஏ, 354 டி மற்றும் 506 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3