Gun Fire (Photo Credit: PIxabay)

மார்ச் 19, முசாபர்நகர் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி நகரில் கல்வித்துறையை சேர்ந்த சிலர் உத்தர பிரதேச வாரிய தேர்வுக்கான விடைத்தாள்களை வாகனத்தில் கொண்டு சென்றுள்ளனர். அதில், ஆசிரியரான தர்மேந்திர குமார், மற்றொரு ஆசிரியர் ஒருவர் மற்றும் இரு பணியாளர்கள் ஆகியோர் சென்றனர். இவர்களுடன் வாரணாசி காவல்துறையினர் சிலர் சென்றனர். இவர்கள் சென்றபோது, கல்லூரியின் வாசல் மூடப்பட்டு இருந்தது. இதற்கிடையில் அனைவரும் கதவு திறக்கும் வரை காத்திருந்தனர். அப்போது, தலைமை காவலரான சந்திர பிரகாஷ் மதுபோதையில், உடன் இருந்தவர்களிடம் புகையிலை வேண்டும் என கேட்டுள்ளார். District Collector Advises To Pregnant Women: ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் – கர்ப்பிணி பெண்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை..!

இதனையடுத்து, ஆசிரியர் தர்மேந்திரா அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கோபத்தில் காவல்துறை அதிகாரி பிரகாஷ் தன்னிடம் இருந்த துப்பாக்கியை கொண்டு தர்மேந்திராவை சுட்டுவிட்டார். இதனால், அவர் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து அவரை உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இருப்பினும், அவர் வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டது. இதனால் இவரின் குடும்பத்தார்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர்.

இச்சம்பவம் தொடர்பாக, தர்மேந்திராவின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன்பேரில், சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.