மார்ச் 19, நாமக்கல் (Health Tips): நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் போஷன் பக்வாடா என்ற ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. A Child Food Habits: கண்ணாடி, மரக்கட்டை என எதைப்பார்த்தாலும் சாப்பிடும் 3 வயது வினோத குழந்தை – காரணம் என்ன?..!
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் உமா அவர்கள் கலந்துகொண்டார். அதில் அவர் கூறுகையில், “தாய்மார்கள் அனைவரும் எடை குறைவில்லாத ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என அரசு மருத்துவமனைகளில் அதிக வசதிகள் இருந்தபோதிலும், 100 குழந்தைகளில் 20 குழந்தைகள் எடை குறைவாகவே பிறக்கின்றன. இதற்கு மிக முக்கிய காரணமாக, தாய்மார்கள் கர்ப்ப காலத்திலும், பாலூட்டும் காலத்திலும் அவர்களின் உடல் எடையை அவர்கள் சரியாக வைத்துக்கொள்வது இல்லை என கூறியுள்ளார்.
மேலும், கர்ப்பிணி பெண்கள் சத்தான உணவை உட்கொண்டால் பிறக்கும் குழந்தைகளின் உடல் எடை நன்றாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். மருத்துவர்களின் ஆலோசனையின் படி, உணவு முறைகளை பின்பற்ற வேண்டும். அவர்களின் ஆலோசனைப்படி கடைபிடிப்பதனால் அனைத்து தாய்மார்களும், எடை குறைவில்லாத குழந்தைகளை பெற்றெடுக்க முடியும்” எனவும் கூறினார்.