ஜூலை 12, சேலம் (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2024) டி20 கிரிக்கெட் தொடர் சேலம் மாவட்டம், வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நடைபெற்ற 9-வது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் (SS Vs NRK) அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி 19.2 ஓவரிலேயே 141 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. Old Woman Hacked To Death: மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மூதாட்டி வெட்டிக் கொலை; மதுரையில் பரபரப்பு சம்பவம்..!
நெல்லை ராயல் கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சோனு யாதவ் 5 விக்கெட்டைகளை கைப்பற்றினர். சிலம்பரசன் 2 விக்கெட்டுகள், இம்மானுவேல், மோகன் பிரசாத், ஹரிஷ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனையடுத்து, 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி 18.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியில் யாழ் அருண்மொழி 3 விக்கெட்டையும், ஹரிஷ் குமார் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர். பொய்யாமொழி மற்றும் சன்னி சந்து தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். ஆட்டநாயகன் விருதை அபாரமாக பந்துவீசிய சோனு யாதவ் பெற்று சென்றார்.
First fifer for Sonu Yadav in TNPL and our Shriram Player of the Match. @NRKTNPL
5/30 in 4 overs. #TNPL2024#NammaOoruAattam#NammaOoruNammaGethu pic.twitter.com/n2Oigg3HaB
— TNPL (@TNPremierLeague) July 12, 2024