
பிப்ரவரி 13, பெங்களூர் (Karnataka News): முந்தைய காலகட்டங்களில் வேலை என்பது கடுமையான உடல் உழைப்பை வெளிப்படுத்தும் வண்ணம் இருந்தது. ஆனால், தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்களின் அறிமுகம், மனித உடல் உழைப்பை மிச்சப்படுத்தி, செயல்திறனை அதிகரித்தது. இன்றளவில் தகவல் தொழில்நுட்பம், இணையவழி வேலைகள் என்பது அபரீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஐடி உட்பட தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் நபர்கள், வீடுகளில் இருந்து பணியாற்றும் நிலை என்பது அதிகரித்துவிட்டது. இவ்வாறாக வீடுகளில் இருந்து பணியாற்றுவோருக்கு இணைய சேவை, மடிக்கணினி அல்லது கணினி போன்றவை மிக முக்கியமானது ஆகும். கொரோனா வைரசுக்கு பின்னர் வீட்டில் இருந்து பணியாற்றும் சூழ்நிலை என்பது அதிகம் ஊக்குவிக்கப்பட்டது. பல தொடக்க நிலை நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதை ஊக்குவித்து தனது நிறுவனத்தின் செயல்திறனை அதிகரித்துக்கொண்டது. School Girl Abuse: பள்ளி கழிவறையில் மாணவி பலாத்காரம்.. ஆசிரியருக்கு அடி, உதை..!
காரில் வேலையை கவனித்தபடி பயணித்த பெண்:
சில முன்னணி நிறுவனங்கள் தொடக்கத்தில் வீட்டில் இருந்து பணியாயற்ற அனுமதித்தாலும், பின்னாளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, தனது பணியாளர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைத்தது. வீட்டில் இருந்து பணியாற்றுவது தொடக்கத்தில் எளிதாக அமைந்தாலும், பின்னாளில் அது பெரிய தலைவலியாகிய நிகழ்வுகளும் நடந்தது. வீட்டில் இருந்து பணியாற்றுவதால், எந்த நேரமும் பணியாளர்கள் அலுவலகத்துடன் இணைந்து இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில், அப்படியான பொறுப்பு ஒன்றில் இருக்கும் பெண், ஓடும் காரில், காரை இயக்கியபடி மடிக்கணினியில் வேலைகளை கவனித்துக்கொண்டு இருந்த வீடியோ வெளியாகியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சியில், கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில், ஆர்.டி நகர் பகுதியில் காரில் பயணம் செய்த பெண் வேலைகளை கவனித்தபடி காரையும் இயக்கி சென்றுள்ளார். இது போக்குவரத்து சட்டப்படி தவறு என்பதால், பெங்களூர் காவல் துறையினர் பெண்ணுக்கு ரூ.1000 அபராதம் விதித்துள்ளனர். Unnatural Sex By Husband Not Offence: மனைவியுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றமல்ல.. சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு..!
காரை இயக்கியபடி பெண்மணி வேலைகளை கவனிக்கும் வீடியோ காட்சி:
बेंगलुरु में गाड़ी चलाते समय लैपटॉप पर काम करने पर महिला पर जुर्माना लगाया गया। पुलिस ने उसे सलाह दी कि 'कार से नहीं, घर से काम करो'।
आरटी नगर पुलिस स्टेशन की सीमा में गाड़ी चलाते समय लैपटॉप का इस्तेमाल करने वाली महिला का एक वीडियो सोशल मीडिया पर वायरल हुआ। अधिकारियों के अनुसार,… pic.twitter.com/4YJOZPMxfR
— AajTak (@aajtak) February 13, 2025